தெலுங்கானாவில் சுகாதார சீர்த்திருத்தங்கள் மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகின்ற நோயாளிகளுக்கு மலிவுவிலையில் சேவைகளை வழங்க உள்ளதாக அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த சுகாதார துறைகளில் பல்வேறு முக்கிய சீர்த்திருத்தங்களை கொண்டு வரவும், ஏழை எளியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க அம்மாநிலஅரசு சில முக்கிய பரிந்துரைகளை செயல்படுத்த உள்ளது.
இது குறித்துநடந்த அமைச்சரவை துணைக் குழு கூட்டத்தில் சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் மற்றும் நகராட்சி துறை அமைச்சர் கே.டி ராமாராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாற்றுஅறுவை சிகிச்சை குறித்து சுகாதாரதுறை அமைச்சர் ராஜேந்தர் கூறுகையில், முதல்வர் சந்திரசேகர ராவ் அமைத்த அமைச்சரவை துணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, சுகாதாரதுறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மலிவு விலையில் வழங்குவதில் ஒரு படியாக, ஐதராபாத்தில் அனைத்து மூன்றாம் நிலை அரசு மருத்துவமனைகளிலும் உயர்நிலை நடைமுறைகளுக்கு மாநில அரசு ஊக்கமளிக்கும். இதனுடன் காந்தி மருத்துவமனை, உஸ்மானியா பொது மருத்துவமனை (OGH) மற்றும் நிஜாமின் மருத்துவ அறிவியல் நிறுவனம் (நிம்ஸ்) போன்றவற்றில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறந்த மையங்களை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…