மாற்றுஅறுவை சிகிச்சை இனி மலிவு விலையில்!-தெலுங்கான அரசு அதிரடி

Default Image

தெலுங்கானாவில் சுகாதார சீர்த்திருத்தங்கள் மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகின்ற நோயாளிகளுக்கு மலிவுவிலையில் சேவைகளை வழங்க உள்ளதாக அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த சுகாதார துறைகளில் பல்வேறு முக்கிய சீர்த்திருத்தங்களை கொண்டு வரவும்,  ஏழை எளியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க அம்மாநிலஅரசு சில முக்கிய பரிந்துரைகளை செயல்படுத்த உள்ளது.

இது குறித்துநடந்த அமைச்சரவை துணைக் குழு கூட்டத்தில் சுகாதாரதுறை அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் மற்றும் நகராட்சி துறை அமைச்சர் கே.டி ராமாராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மாற்றுஅறுவை சிகிச்சை குறித்து  சுகாதாரதுறை அமைச்சர் ராஜேந்தர் கூறுகையில், முதல்வர் சந்திரசேகர ராவ் அமைத்த அமைச்சரவை துணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, சுகாதாரதுறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு மலிவு விலையில் வழங்குவதில் ஒரு படியாக, ஐதராபாத்தில்  அனைத்து மூன்றாம் நிலை அரசு மருத்துவமனைகளிலும் உயர்நிலை நடைமுறைகளுக்கு மாநில அரசு ஊக்கமளிக்கும். இதனுடன் காந்தி மருத்துவமனை, உஸ்மானியா பொது மருத்துவமனை (OGH) மற்றும் நிஜாமின் மருத்துவ அறிவியல் நிறுவனம் (நிம்ஸ்) போன்றவற்றில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறந்த மையங்களை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்