ஒரே நாளில் அதிரடியாக உத்தரப்பிரதேசத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!
ஒரே நாளில் அதிரடியாக உத்தரப்பிரதேசத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப் பட்டுள்ளனர்.
அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா ஆகியோர், ஏற்கனவே ராஜினாமா செய்ததால் காலியாக இருந்த கோரக்பூர், புல்பூர் மக்களவை தொகுதிகளில் அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியுற்றது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றி, உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கோரக்பூர் மாவட்ட ஆட்சியர் ராஜிவ் ராட்டிலா தேவிபட்டினம் கோட்ட ஆணையராக மாற்றப் பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அரசைப் பற்றி கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்திய, பரேலி மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங், பொறுப்பிலிருந்து நீக்கப் பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.