தேர்தல் ஈடுபடும் அதிகாரிகள் இடமாற்றம்….தொடங்கியது தேர்தல் பனி…!!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணியாற்றினால் அவர்களை வேறு இடங்களுக்கு மாறுதல் செய்யக்கோரி மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற மற்றும் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் தொடர்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.
அதில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் வரை பணியில் உள்ள அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடவேண்டி இருந்தால், அவர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களை சொந்த ஊர்களில் பணி நியமனம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.