மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கடந்த மே மாதம் முதல் துவங்கி இன்னும் அம்மாநில மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் இன்னுமும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மணிப்பூர் வன்முறையில் பெண்களுக்கு பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. விடீயோக்கள் மூலம் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதறவைத்தன. மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை வழக்குகளை சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், பாதிப்பு ஏற்பட்ட மணிப்பூர் மாநிலத்திலேயே இந்த வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்றால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகும் என கூற்றுகள் எழுந்த பிறகு, உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், சிபிஐ இந்த வழக்கை மணிப்பூரில் வைத்து விசாரிக்க வேண்டாம் எனவும், அசாம் மாநிலத்தில் இதன் மீதான விசாரணையை மேற்கொள்ளுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ , மணிப்பூர் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மொத்தமாக 21 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…