நாளை முதல் உயர்கிறது ரயில் டிக்கெட் !ரயில்வே துறை அறிவிப்பு

Default Image

ரயில்வே ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு நாளை முதல் மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.இதன் பின்னர்  பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதைதொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரயில்வே ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு நாளை முதல் மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது . ஏசி இல்லாத வகுப்புகளுக்கு ரூ.15+ஜிஎஸ்டி, ஏசி வகுப்புகளுக்கு ரூ.30+ஜிஎஸ்டி சேவைக்கட்டணம் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
PM Modi
SRH vs MI - IPL 2025
RIP Syed Adil Hussain Shah - PAHALGAM Attack
pahalgam ipl bcci
Union minister Amit shah visit Anantnag dt hospital
JK Pahalgam Terror Attack