கொரோனா வைரஸ் காரணாமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 12 -ஆம் தேதி (அதாவது நாளை )வரை ரயில் சேவைகள் ரத்து என்று ரயில்வே வாரியம் கூறியிருந்த நிலையில்,புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில், அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து வழக்கமான பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகளும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் எனவும், அதே வேளையில் தற்போது இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள் சேவை என்பது தொடரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மும்பையில் உள்ள உள்ளூர் ரயில்கள், தற்போது மாநில அரசின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே வரையறுக்கப்பட்ட அடிப்படையில் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தேவையின் அடிப்படையில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கலாம் என தெரிவித்துள்ளது.
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…
சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…
மாஸ்கோ : அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மேற்பட்ட மாகாணங்களில் வெற்றி பெற்று…
சென்னை : திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை கலைஞர் பெயரால் அமைப்பதற்கான பணிகள் இன்று…