#BREAKING: அடுத்த அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை தடை..! மத்திய ரயில்வே.!
கொரோனா வைரஸ் காரணாமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஆகஸ்ட் 12 -ஆம் தேதி (அதாவது நாளை )வரை ரயில் சேவைகள் ரத்து என்று ரயில்வே வாரியம் கூறியிருந்த நிலையில்,புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில், அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து வழக்கமான பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகளும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படும் எனவும், அதே வேளையில் தற்போது இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள் சேவை என்பது தொடரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மும்பையில் உள்ள உள்ளூர் ரயில்கள், தற்போது மாநில அரசின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே வரையறுக்கப்பட்ட அடிப்படையில் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தேவையின் அடிப்படையில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கலாம் என தெரிவித்துள்ளது.