டெல்லி-கேரளா சிறப்பு ரயிலில் பயணித்த பயணிகள் 7 பேருக்கு கொரோனா அறிகுறி… மருத்துவமனைகளில் அனுமதி…
டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று கேரளா பயணம் செய்த 7 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா சிறப்பு ரயில் தலைநகர் டெல்லியில் இருந்து புறப்பட்டு நேற்று கேரளா வந்தது. இதில் பயணம் செய்த 7 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முழு ஊரடங்கின் காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவிப்பவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல டெல்லியில் இருந்து 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் சேவை கடந்த 2 தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து 900-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கேரளாவுக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் நேற்று அதிகாலை திருவனந்தபுரத்தை வந்தடைந்தது. இந்த சிறப்பு ரயில் கோழிக்கோடு, எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே நிற்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 3 ரயில் நிலையங்களிலும் பயணிகளை பரிசோதிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி ரயில்கோழிக்கோட்டை வந்தடைந்தது. இதில் 20 பேர் கொண்ட குழுக்களாக பயணிகளை இறக்கி, 10க்கும் மேற்பட்ட கவுன்டர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.
இதேபோல திருவனந்தபுரத்தில் நடந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.