கேட்டை கடக்க முயன்ற லாரி மீது ரயில் மோதி விபத்து…!
கர்நாடகாவில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிப்பர் லாரி மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் ஆனேகல் அருகே அவளஹள்ளி எனும் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க ஒரு டிப்பர் லாரி நின்று கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது அந்த லாரி கேட்டை கடக்க முயன்ற போது மைசூரில் இருந்து ஓசூர் நோக்கி வந்த தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் வேகமாக வருவதை கண்ட லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடியுள்ளார்.
வேகமாக வந்த ரயில் டிப்பர் லாரி மீது மோதி வெகுதூரம் இழுத்துச் சென்ற நிலையில், லாரி மின்கம்பத்தில் மோதி பக்கவாட்டில் தூக்கி வீசப்பட்டு உள்ளது. ரயில் இன்ஜினுக்கு அடியில் சிக்கிய லாரியை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த விபத்தில் ரயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இந்த விபத்தில் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு ரயில்வே போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.