ரயில், விமான சேவைகள் தொடங்கிதான் ஆக வேண்டும். ஆனால், அந்த நாள் எப்போது என இன்னும் முடிவு செய்யவில்லை. – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால், ரயில், விமான போக்குவரத்து சேவைகள் மறுதேதி அறிவிப்பின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு மே 3ஆம் தேதி நிறைவடைவதை அடுத்து, மே 4ஆம் தேதி முதல் ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமான சேவையை தொடங்க சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவை தொடங்கியுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ரயில், விமான சேவைகள் தொடங்கிதான் ஆக வேண்டும். ஆனால், அந்த நாள் எப்போது என இன்னும் முடிவு செய்யவில்லை. தினமும் கொரோனா தொற்று பரவல் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறுகையில், ‘ விமான போக்குவரத்தை எப்போது தொடங்கும் என மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. அரசு முடிவு செய்த பிறகே டிக்கெட் முன்பதிவை தொடங்குங்கள்.’ என விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தி விமான போக்குவரத்துக்கு எப்போது தொடங்கும் என தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…