Train Accident: 14 பேரின் உயிரை காவு வாங்கிய ஆந்திர மாநில ரயில் விபத்திற்கு ஓட்டுனர்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்ததே காரணம் என தெரியவந்துள்ளது. கிரிக்கெட் போட்டியை கண்டு களித்ததால் ஏற்பட்ட கவனச் சிதைவே விபத்திற்கான காரணம் என நாட்டின் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று முன்தினம் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளாகின. விசாகப்பட்டினம் ராயகடா பயணிகள் ரயில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயில் வந்ததால் இவ்விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் இந்திய ரயில்வேயின் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில்” ஆந்திர ரயில் விபத்திற்கு மிக முக்கியமான காரணம் வண்டியை இயக்கிய லோகோ பைலட்கள் கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டே வண்டியை இயக்கியது தான்.
இதன் மூலம் அவர்களது கவனம் சிதறடிக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. ஓட்டுநர்கள் மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்குவதில் முழுமையாக கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறோம். ஒவ்வொரு சம்பவத்திலும் மூல காரணத்தை கண்டறிய முயற்சி செய்து, அது மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு தீர்வைக் கொண்டு வருகிறோம்” என்றார்.
ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் 19-வது ஜி20 உச்சி மாநாடானது நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. திருவாரூர் உள்ளிட்ட…
டெல்லி : மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினமான இன்று (நவம்பர் 19) டெல்லியில் உள்ள…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சி ஆரம்பித்து தனது முதல் மாநில மாநாட்டை…
சென்னை : கடந்த 2 வாரங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை…