கடந்த ஆண்டு அறிமுகமான ஜியோ டெலிகாம் துறையில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.இந்நிலையில் இதற்க்கு முன் இருந்த ஏர்டெல்,வோடபோன் சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.எனவே தற்போது ஜியோ குறித்து ட்ராய் ஒரு விவரம் வெளியிட்டுள்ளது.
டிராய் (Trai) நடத்திய நவம்பர் மாத 4ஜி மொபைல் தரவு வேக சோதனையில் நாட்டின் மிகப்பெரிய மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி தொடர்ச்சியாக 11-வது மாதமாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.
கடந்த 2017 நவம்பர் மாதத்தில், ஜியோவின் மொபைல் தரவு வேகம் (பதிவிறக்கம்) ஆனது 25.6 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. இது 2017 ஆண்டு காலண்டரில் அதிகபட்ச வேகமாகும் என்பதையும் டிராய் சுட்டிக்காட்டியுள்ளது. ஜியோவின் முந்தைய டேட்டா வேகப்பதிவுகளுடன் ஒப்பிடும் போது வெகுவான வளர்ச்சியை நேரடியாகவே காணமுடிகிறது.
இதற்கு முந்தைய தரவு வேகங்களை பொறுத்தமட்டில், அதாவது 2017-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே 17.4 எம்பிபிஎஸ், 16.5 எம்பிபிஎஸ், 18.5 எம்பிபிஎஸ், 19.1 எம்பிபிஎஸ், 18.8 எம்பிபிஎஸ், 18.7 எம்பிபிஎஸ், 18.4 எம்பிபிஎஸ், 18.4 எம்பிபிஎஸ், 21.9 எம்பிபிஎஸ் மற்றும் 21.8 எம்பிபிஎஸ் என பதிவாகியுள்ளது.
மறுகையில் உள்ள ஜியோவின் பிரதான போட்டியாளரான பார்தி ஏர்டெல் நிறுவனமானது 9.8 எம்பிபிஎஸ் என்கிற அளவிலான வேகத்தை பதிவு செய்துள்ளது. ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் ஏர்டெல் மூலம் பதிவாகியுள்ள மிகச்சிறந்த செயல்திறன் இதுவாகும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், ஏர்டெல் ஆனது முறையே 7.5 எம்பிபிஎஸ் மற்றும் 9.3 எம்பிபிஎஸ் வேகத்தை பதிவு செய்தது.
வோடபோன் இந்தியா நிறுவனமானதும் ஏர்டெல் நிறுவனத்தை பின்பற்றியது. நவம்பர் மாதம் அதன் செயல்திறனானது 10 எம்பிபிஎஸ் என்கிற புள்ளியை தொட்டது. அதற்கு முன்னர் அதாவது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே 8.7எம்பிபிஎஸ் மற்றும் 9.9எம்பிபிஎஸ் என்கிற வேகத்தை பதிவு செய்தது.
இறுதியாக, ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் செயல்திறன் ஏமாற்றமளிக்கிறது என்றே கூறலாம். அதன் மொபைல் தரவு வேகம் ஏப்ரல் முதல் தொடர்ந்து சீர்குலைந்த வண்ணம் உள்ளது. இது நவம்பர் மாதத்தில் 7 எம்பிபிஎஸ் வேகத்தை பதிவு செய்துள்ளது. இது 2017 ஆம் ஆண்டின் மிக குறைவான வேகமாகும்.
ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஐடியா நிறுவனமானது 13.7எம்பிபிஎஸ், 11.7எம்பிபிஎஸ், 9.5 எம்பிபிஎஸ், 8.9 எம்பிபிஎஸ், 8.8 எம்பிபிஎஸ், 8.6 எம்பிபிஎஸ் மற்றும் 8.1 எம்பிபிஎஸ் என்று பதிவாகியது. ஆக ஐடியா செல்லுலார் நிறுவனமானது பின்னோக்கி பயணிப்பதை அறிய முடிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…