4-ஜி சேவையில் எது சிறந்தது?எது வேகமானது?இதோ ட்ராய் வெளியிட்டுள்ள விவரம் ….

Default Image

கடந்த  ஆண்டு அறிமுகமான  ஜியோ டெலிகாம் துறையில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.இந்நிலையில் இதற்க்கு முன் இருந்த ஏர்டெல்,வோடபோன்  சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.எனவே தற்போது ஜியோ குறித்து ட்ராய் ஒரு விவரம் வெளியிட்டுள்ளது.

Image result for jio  vs airtel

டிராய்  (Trai) நடத்திய நவம்பர் மாத 4ஜி மொபைல் தரவு வேக சோதனையில் நாட்டின் மிகப்பெரிய மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி தொடர்ச்சியாக 11-வது மாதமாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

Image result for jio

கடந்த 2017 நவம்பர் மாதத்தில், ஜியோவின் மொபைல் தரவு வேகம் (பதிவிறக்கம்) ஆனது 25.6 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. இது 2017 ஆண்டு காலண்டரில் அதிகபட்ச வேகமாகும் என்பதையும் டிராய் சுட்டிக்காட்டியுள்ளது. ஜியோவின் முந்தைய டேட்டா வேகப்பதிவுகளுடன் ஒப்பிடும் போது வெகுவான வளர்ச்சியை நேரடியாகவே காணமுடிகிறது.

Related image

இதற்கு முந்தைய தரவு வேகங்களை பொறுத்தமட்டில், அதாவது 2017-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே 17.4 எம்பிபிஎஸ், 16.5 எம்பிபிஎஸ், 18.5 எம்பிபிஎஸ், 19.1 எம்பிபிஎஸ், 18.8 எம்பிபிஎஸ், 18.7 எம்பிபிஎஸ், 18.4 எம்பிபிஎஸ், 18.4 எம்பிபிஎஸ், 21.9 எம்பிபிஎஸ் மற்றும் 21.8 எம்பிபிஎஸ் என பதிவாகியுள்ளது.

மறுகையில் உள்ள ஜியோவின் பிரதான போட்டியாளரான பார்தி ஏர்டெல் நிறுவனமானது 9.8 எம்பிபிஎஸ் என்கிற அளவிலான வேகத்தை பதிவு செய்துள்ளது. ஜியோவின் அறிமுகத்திற்கு பின்னர் ஏர்டெல் மூலம் பதிவாகியுள்ள மிகச்சிறந்த செயல்திறன் இதுவாகும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், ஏர்டெல் ஆனது முறையே 7.5 எம்பிபிஎஸ் மற்றும் 9.3 எம்பிபிஎஸ் வேகத்தை பதிவு செய்தது.

வோடபோன் இந்தியா நிறுவனமானதும் ஏர்டெல் நிறுவனத்தை பின்பற்றியது. நவம்பர் மாதம் அதன் செயல்திறனானது 10 எம்பிபிஎஸ் என்கிற புள்ளியை தொட்டது. அதற்கு முன்னர் அதாவது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் முறையே 8.7எம்பிபிஎஸ் மற்றும் 9.9எம்பிபிஎஸ் என்கிற வேகத்தை பதிவு செய்தது.

இறுதியாக, ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் செயல்திறன் ஏமாற்றமளிக்கிறது என்றே கூறலாம். அதன் மொபைல் தரவு வேகம் ஏப்ரல் முதல் தொடர்ந்து சீர்குலைந்த வண்ணம் உள்ளது. இது நவம்பர் மாதத்தில் 7 எம்பிபிஎஸ் வேகத்தை பதிவு செய்துள்ளது. இது 2017 ஆம் ஆண்டின் மிக குறைவான வேகமாகும்.

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஐடியா நிறுவனமானது 13.7எம்பிபிஎஸ், 11.7எம்பிபிஎஸ், 9.5 எம்பிபிஎஸ், 8.9 எம்பிபிஎஸ், 8.8 எம்பிபிஎஸ், 8.6 எம்பிபிஎஸ் மற்றும் 8.1 எம்பிபிஎஸ் என்று பதிவாகியது. ஆக ஐடியா செல்லுலார் நிறுவனமானது பின்னோக்கி பயணிப்பதை அறிய முடிகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்