சோகம்..2 நாட்களில் இரண்டு இந்திய விமானிகள் மரணம்.!
கடந்த இரண்டு நாட்களில் இரண்டு இந்திய விமானிகள் மரணமடைந்துள்ளனர். அதன்படி, இன்று நாக்பூரில் உள்ள போர்டிங் கேட்டில் இண்டிகோ கேப்டன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
நாக்பூரில் எங்கள் விமானி ஒருவர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
மற்றொரு சம்பவத்தில் கத்தார் ஏர்வேஸ் விமானி, டெல்லி-தோஹா விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு முன்பு ஸ்பைஸ்ஜெட், அலையன்ஸ் ஏர் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.