டெல்லி போலீஸ் அதிகாரிக்கு ரிட்டையர் ஆகும் நேரத்தில் நடந்த சோகம்..!
டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் லத்தூர் சிங் என்பவர் பணிஒய்வு பெறுவதற்கு முன்பு கார் விபத்தில்
டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரியும் லத்தூர் சிங் என்பவர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிங் பணியில் இருந்த நேரத்தில் ரிங் ரோட்டில் ராஜ்காட் மற்றும் சாந்திவன் சிக்னல்களுக்கு இடையே கார் ஒன்று அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங் மீது மோதிய காரை போலீஸார் பறிமுதல் செய்து காரை ஓட்டி வந்த நபரைக் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த சோகேந்திரா என்று காவல்துறைனர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் கீழ் தர்யாகஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. லத்தூர் சிங் வரும் ஜனவரி 31-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.