கேரளாவில் கணவரை பிரிந்து ஆண் நண்பருடன் வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
கேரளாவில் கணவரை பிரிந்து ஆண் நண்பருடன் வாழ்ந்த பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற ஆண் நண்பர்.
கேரளாவில் உள்ள முவட்டுபுழா எனும் பகுதியை சேர்ந்தவர் தான் 30 வயதான பல் மருத்துவர் சோனா. இவருக்கு திருமணம் ஆகியிருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே தனது கணவரை பிரிந்து விட்டார். இருப்பினும் தனது ஆண் நண்பர் மகேஷ் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் சேர்ந்து டென்டல் கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். வருமானம் நல்லபடியாக வந்தது, கணவன் கேள்வி கேட்க இல்லை என்பதால் சோனாவிடம் நிறைய பண புழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் மகேஷும் அந்த பணத்தை இஷ்டத்துக்கு வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.
சில காலங்கள் செல்ல நான் மகேஷிடம் ஏமாறுகிறேன் என்று உணர்ந்து இதுவரை கொடுத்த பணத்தை பற்றி மகேஷிடம் கேள்வி கேட்டுள்ளார் சோனா. அப்போது மகேஷ் பணத்தை கொடுக்க மறுத்துள்ளதுடன் தனது சுயரூபத்தைக் காட்டி உள்ளார். அதனை அடுத்து மகேஷ் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த மகேஷ் இனி சோனாவை உயிருடன் விட்டால் ஆபத்து என்று நினைத்து கடந்த 29ஆம் தேதி கிளினிக்குக்குள் சோனா வந்த பொழுது பல முறை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்த சோனாவை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இருப்பினும் செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதன்பின் தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த போலீசார், மகேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.