மகாராஷ்டிராவில் கார் ஒன்று ஜீப் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி தாலுகாவில் கார் ஒன்று ஜீப் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் வாணியில் இருந்து சபுதாரா செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கோரி பாடா அருகே நடந்துள்ளது.
இதில் கார் சபுதாராவில் இருந்து வாணி நோக்கி சென்று கொண்டிருந்த போது ஜீப் மீது மோதியுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நாசிக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, நாக்பூரில் இருந்து புனே நோக்கி 33 பயணிகளுடன் புல்தானாவில் உள்ள சம்ருதி மகா மார்க் விரைவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, திடீரென்று டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதிலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…