சோகம் – கர்நாடகாவில் AC வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

கார்டாகவில் ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு.
கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் மாரியம்மனஹள்ளி கிராமத்தில் வீட்டில் உள்ள AC வெடித்து தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. AC வெடித்ததால் விஷ வாயு கசிந்தததா? அல்லது தீயால் ஏற்பட்ட புகையில் மூச்சு திணறி இறந்தார்கள் என்று போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ஏசியில் இருந்து வாயு கசிந்ததால் தீ பரவி, மின்சார ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தியதால் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் வெங்கட் பிரசாந்த் (42), அவரது மனைவி டி.சந்திரகலா (38), அவர்களின் மகன் ஆத்விக் (6) மற்றும் மகள் பிரேரனா (8) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இறந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஏதேனும் கடன்கள் இருந்ததா அல்லது குடும்பம் ஏதேனும் மன அழுத்தத்தில் இருந்ததா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025