சோகம்! திருப்பதியிலிருந்து வந்த கார் மீது லாரி மோதி விபத்து; சம்பவ இடத்தில் 6 பேர் பலி.!
திருப்பதியிலிருந்து சென்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி.
திருப்பதியிலிருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்த கார் மற்றும் லாரி இரண்டும் ஒன்றுக்கொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில், காரில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். திருப்பதியில் சாமி தரிசனம் முடித்துக்கொண்டு திரும்பும்போது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் காரில் 7 பேர் பயணித்ததாகவும், விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.