நொய்டா-டெல்லி இணைப்புச் சாலையை முற்றுகையிட்ட விவசாயிகள் – போக்குவரத்து பாதிப்பு

Default Image

இன்று 21 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நொய்டா-டெல்லி இணைப்புச் சாலையில்  விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை   திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு மதிக்காததால் தமது போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் முடிந்துள்ளது.ஆகவே நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர் விவசாயிகள்.

இந்நிலையில் இன்று 21 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நொய்டா-டெல்லி இணைப்புச் சாலையான சில்லா எல்லை பகுதியில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
pays last respects to former PM Dr Manmohan Singh
Manmohan Singh's net worth
Former PM Manmohan singh
Gold Rat
BJP State president Annamalai Protest
Indian cricket team players in IND vs AUS