நாளை டிராக்டர் பேரணி… டிராக்களுடன் குவியும் விவசாயிகள்..!
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் 60 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இதுவரை 11 கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதனால், போராட்டத்தை நாளை குடியரசு தினத்தன்று பிராமாண்ட டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.
ஒரு புறம் நாளை குடியரசு தினமான நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், மறுபுறம் நாளை விவசாயிகள் அறிவித்தபடி டிராக்டர் பேரணி நடத்தவுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நாளை நடபெறவிருக்கும் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள உத்திரபிரதேச -டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர்களுடன் குவிந்து வருகின்றனர்.
இந்த பேரணி சிங்கு, காசிப்பூர், பல்வால், திக்ரி, ஷாஜகான்பூர் ஆகிய 5 பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே எந்தவித இடையூறு இல்லாமல் பேரணி நடத்த விவசாயிகளுக்கு போலீசார் அனுமதியளித்துள்ளனர்.