டிராக்டர் பேரணி…செங்கோட்டையில் விவசாயக்கொடி..!

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 62-வது நாளான இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். சிங்கு, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர்.
அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன் டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது. டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போது தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்நிலையில், செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக்கொடியை ஏற்றினர். இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற வாகனங்கள் செங்கோட்டையில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025