டெல்லியில் உள்ள செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாய அமைப்புகள் 60-நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இன்று குடியரசு தினத்தையொட்டி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். டெல்லியை சுற்றி சுமார் 2 லட்சம் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர்.மத்திய டெல்லியை நோக்கி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் டெல்லி சஞ்சய் காந்தி நகரில் விவசாயிகளை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இன்று நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற வாகனங்கள் செங்கோட்டையில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…