டெல்லியில் இந்தியா கேட் அருகே டிராக்டர் எரிக்கப்பட்டது .
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. இம்மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களும் ஜனாதிபதியின் ஓப்புதல் வழங்கிய உள்ளார். இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் ஒரு டிராக்டர் எரிக்கப்பட்டது.
இந்தியா கேட்டில் டிராக்டர் எரிக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். இவர்கள் அனைவருமே பஞ்சாபில் வசிப்பவர்கள் எனவும், டொயோட்டா இன்னோவா காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காலை 7.42 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பான தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 15முதல் 20 பேர் இந்தியா கேட் முன் கூடி ஒரு டிராக்டருக்கு தீ வைக்க வைத்தாகவும், தீ அணைக்கப்பட்டு ஒரு டிராக்டரும் அகற்றப்பட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
“ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்ற முழக்கங்களையும் எழுப்பினர் எனவும் காலை 7.15-7.30 மணியளவில் துணை போலீஸ் கமிஷனர் ஈஷ் சிங்கால் தெரிவித்தார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…