டெல்லி இந்தியா கேட் அருகே டிராக்டர் எரிப்பு..!

Default Image

டெல்லியில் இந்தியா கேட் அருகே டிராக்டர் எரிக்கப்பட்டது .

நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. இம்மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய மசோதாக்களும் ஜனாதிபதியின் ஓப்புதல் வழங்கிய உள்ளார்.  இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் ஒரு டிராக்டர் எரிக்கப்பட்டது.

இந்தியா கேட்டில் டிராக்டர் எரிக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.  இவர்கள் அனைவருமே பஞ்சாபில் வசிப்பவர்கள் எனவும், டொயோட்டா இன்னோவா காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காலை 7.42 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பான தகவல் தங்களுக்கு கிடைத்ததாகவும், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 15முதல்  20 பேர் இந்தியா கேட் முன்  கூடி ஒரு டிராக்டருக்கு தீ வைக்க வைத்தாகவும்,  தீ அணைக்கப்பட்டு ஒரு டிராக்டரும் அகற்றப்பட்டதாகவும், சம்பந்தப்பட்டவர்களிடம்  விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

 “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்ற முழக்கங்களையும் எழுப்பினர்  எனவும்  காலை 7.15-7.30 மணியளவில்  துணை போலீஸ் கமிஷனர் ஈஷ் சிங்கால் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்