ரிஷிகேஷில் படகு விளையாட்டில் சுற்றுலாப் பயணிகள் சண்டை… வைரலாகும் வீடியோ.!
ரிஷிகேஷில் ரிவர் ராஃப்டிங் செய்யும் போது சுற்றுலாப் பயணிகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சில சுற்றுலாப் பயணிகள் கங்கை நதியின் நடுவே ரிவர் ராஃப்டிங்(River rafting) சென்றுள்ளனர். ரிவர் ராஃப்டிங் என்பது நீர்நிலைகளில் மிதக்கும் பலூன் போன்ற படகுகளில் சென்று விளையாடும் பொழுதுபோக்கு நிகழ்வாகும். பெரும்பாலும் இதில் பயணிக்கும் போது ஆபத்துகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் பயணிகள் ரிவர் ராஃப்டிங் செய்யும்போது அவர்களிடையே ஏற்பட்ட சலசலப்பு வன்முறையில் முடிந்துள்ளது, இது கேமராவில் சிக்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படகுகளில் அமர்ந்திருந்த இரு அணிகள் ஒருவரையொருவர் ராஃப்டிங் துடுப்பால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் இருந்து தப்பிக்க படகுகளில் இருந்து ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து முனி கி ரெட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரித்தேஷ் ஷா, இது மிகவும் ஆபத்தான சண்டை. நாங்கள் இந்த வழக்கை விசாரித்து வருவதாகக் கூறினார்.
Shocking video! Tourists fight while river rafting at Rishikesh, dramatically beat each other with paddles#rishikesh #riverrafting #uttarakhand pic.twitter.com/8tG2QptM4S
— official_uttarakhand_walee (@Uttrakhandwalee) May 21, 2023