தாஜ்மஹால் திறக்கும் தேதி அறிவிப்பு…. உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டிருந்தது, இந்த ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டிருந்தது. மேலும் அந்த வகையில் உலக அதிசியத்தில் முக்கியான சுற்றுதலங்களில் ஒன்றான தாஜ்மஹால் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்பொழுது மத்திய அரசு தாஜ்மஹால் திறப்பதற்கான தேதியையும் அதற்கான தளர்வுகளையும் அறிவித்துள்ளது. தாஜ்மாஹால் செப்டம்பர் 21 ம் தேதி முதல் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் தாஜ்மஹாலிற்குள் தினமும் 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் தாஜ்மஹாலிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும். அனவைரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது. தாஜ்மஹாலிற்குள் செல்வதற்கான நுழைவு சீட்டு ஆன்லைன் மூலம் மட்டுமே தரப்படும் என்று கூறபடுகிறது. 5 மாதங்கள் கழித்து தாஜ்மஹால் திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர்.