வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
காஷ்மீரின் பஹல்காமில் தீவிர தாக்குதல் நடைபெற்றபோது, அகமதாபாத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த வீடியோ வெளியாகியிருக்கிறது.

காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முழு சம்பவமும் ஜிப்லைனில் சென்ற சுற்றுலாப் பயணிகளின் கேமராவில் பதிவாகியுள்ளது.
அவர் Zip-Line-ல் பயணிக்கும் பொழுது, கீழே தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. மக்கள் அச்சத்தில் அங்கும் இங்கும் ஓடுகின்றனர். சிலர் சுடப்பட்டு கீழே விழுகின்றனர். ஆனால், இவையேதும் தெரியாமல் சுற்றுலாப்பயணி சிரித்தபடி எஞ்சாய் செய்தார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா டுடேவிடம் பேசிய ரிஷி பட் என்ற நபர், ”ஏப்ரல் 22 அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தினார்.
இந்த வீடியோவை பதிவு செய்த ரிஷி பட், சம்பவம் நடந்த நேரத்தில் ஜிப் லைனிங்கில் இருந்தார். வீடியோவில், பின்னணியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்கும் அதே வேளையில், அவர் சிரித்துக் கொண்டே தன்னைப் பதிவு செய்து கொள்வதைக் காணலாம். ஜிப்லைன் ஆபரேட்டர் “அல்லாஹு அக்பர்” என்று கத்தினார், அதன் பிறகு சிறிது நேரத்திலேயே துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறினார்.
Another terrifying video from Pahalgam:
When terrorists were shooting tourists, zip line operator chanted ‘Allah Hu Akbar’ instead of saving tourists. People can be seen running to save their lives.
This is the REALITY of local Kashmiris. pic.twitter.com/93HH0hEZO6
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) April 28, 2025
ஜிப் லைனில் தான் ஏறுவதற்கு முன்பே, எனது மனைவி, மகன் மற்றும் நான்கு பேர் இங்கிருந்து அங்கு சென்றுவிட்டதாகவும், அவர்கள் இங்கிருந்து ஜிப் லைனில் செல்லும்போது, இந்த ஆள் ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லவில்லை. ஆனால் நான் ஜிப் லைனில் இருந்தபோது, அவர் அதை மூன்று முறை சொன்னார்.
சுமார் 15-20 வினாடிகளுக்குப் பிறகு, தாக்குதல் நடந்தது பற்றி எனக்கு தெரியவந்தது. என் வீடியோவில் ஒரு மனிதன் விழுவதை நீங்கள் காணலாம். அந்த நேரத்தில், ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்தேன். பின்னர் நான் என் ஜிப்லைனில் இருந்து கீழே இறங்கிய பின், என் மனைவி மற்றும் மகனுடன் ஓட ஆரம்பித்தேன்.
என் உயிரையும் என் குடும்பத்தின் உயிரையும் காப்பாற்றுவது பற்றி மட்டுமே நான் யோசித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் காட்டை நோக்கி ஓடிநோம். பின்னர் எங்களது வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்று, அங்கிருந்து பாதுகாப்புக்காக ஸ்ரீநகருக்குச் சென்றதாக அவர் கூறினார்.
மேலும் இது தொடர்பாக மற்றொரு ஊடக ஒன்றிக்கு பேசிய அவர், சுமார் ஐந்து பயங்கரவாதிகள் இராணுவ சீருடையில் இருந்தனர், அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருந்தன. மேலும் அவர்கள் மதத்தைக் கேட்ட பிறகு மக்களைச் சுட்டுக் கொன்றனர். தான் மயிரிழையில் தப்பித்ததாகவும கூறினார்.
இதையடுத்து, ஜிப்லைன் ஆபரேட்டரை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் விசாரணைக்காக அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.