200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து – 8 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றில் ஹைதராபாத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு நோக்கி 20 சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று திடீரென 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் வந்துள்ளனர். அங்கு உயிருக்கு போராடிய நிலையில் காயமடைந்து கிடந்தவர்களுக்கு முதலுதவி கொடுத்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த அனைவரும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025