சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய ஆவணம்.!
SBI : தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் முறையை கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தடை விதித்து உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடு வைத்தது.
Read More – காவேரி நீரை மத்திய அரசு கூறினாலும், தமிழக அரசு கேட்டாலும் தர மாட்டோம்.! சித்தராமையா திட்டவட்டம்.!
இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களையும் வெளியிட கால அவகாசம் கோரி எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவை நேற்று தள்ளுபடி செய்து, மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.
உச்சநீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.
Read More – தேர்தல் பத்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தது SBI வங்கி!
அதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தையும் வாங்கிய தேதி, வாங்கியவரின் பெயர் மற்றும் வாங்கிய தேர்தல் பத்திரத்தின் மதிப்பு ஆகியவை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை தேர்தல் பத்திரங்கள் வாங்கிய மற்றும் திரும்பப் பெறப்பட்ட பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ கூறியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 1, 2019 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 15 வரை அரசியல் கட்சிகளால் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டதாகவும், 22,030 திரும்பப் பெறப்பட்டதாகவும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் 11, 2019 வரை மொத்தமாக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கை 3346 ஆகவும், திரும்பப் பெறப்பட்ட மொத்த பத்திரங்களின் எண்ணிக்கை 1609 ஆகவும் இருந்தது.
Read More – சிஏஏ சட்டம் இந்திய நாட்டுக்கு ஆபத்தானது… அரவிந்த் கெஜ்ரிவால் கடும் குற்றச்சாட்டு!
அதுபோன்று, ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை மொத்தம் வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கை 18,871 ஆகவும், திரும்பப் பெறப்பட்ட மொத்த பத்திரங்களின் எண்ணிக்கை 20,421 ஆகவும் இருந்ததாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் பத்திரங்களின் விவரங்களை மார்ச் 12-ம் தேதி வணிக நேரம் முடிவதற்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளதாகவும் பிராமண பத்திரத்தில் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.