முதல் 50.. வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் யார்? பட்டியலை வெளியிட்ட அரசு!
இந்தியாவின் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் யார்? என்ற முதல் 50 பேர் பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு.
இந்தியாவில் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் முதல் 50 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, வங்கிகளுக்கு ரூ.92,570 கோடி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதில், மெஹுல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் ₹7,848 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. எரா இன்ஃப்ரா (₹5,879 கோடி), ரெய்கோ அக்ரோ (₹4,803 கோடி), கான்காஸ்ட் ஸ்டீல் அண்ட் பவர் (₹4,596 கோடி), ஏபிஜி ஷிப்யார்ட் (₹3,708 கோடி), ஃப்ரோஸ்ட் இன்டர்நேஷனல் (₹3,311 கோடி) மற்றும் வின்சம் டயமண்ட்ஸ் அண்ட் ஜூவல்லரி (₹2,931 கோடி) ) ஆகியவையும் பட்டியலில் உள்ளன.