கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்கள் கொரோனா மருந்தை வாங்கவுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பாளரான ஹெட்டெரோ கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான “Remdesivir” விற்பனை செய்ய ஒப்புதலைப் பெற்றுள்ளது. நாட்டில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உட்பட ஐந்து மாநிலங்களுக்கு இந்த கொரோனா மருந்தின் 20,000 குப்பிகளை இந்நிறுவனம் அனுப்பியுள்ளது. இதன் தொடர்ந்து தமிழகம் மற்றும் குஜராத்திற்கும் இந்த மருந்துகள் அனுப்பப்பட உள்ளது. மேலும் தெலுங்கானாவிலும் இந்த மருந்து கிடைக்குமாம்.
இந்த மருந்து, கொரோனவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்களில் சிகிச்சைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து, ஊசி மூலம் உடம்புக்குள் செலுத்தப்படும். 100 ml கொண்ட இந்த மருந்தின் விலை ரூ5,000-6,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு இந்திய மருந்து நிறுவனமான சிப்லா நிறுவனம், தனது சொந்த ரெமிடெசிவிரை “சிப்ரேமி” (Cipremi) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்க்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்கலாம் என தெரிவித்தனர்.
மேலும், இந்த மருந்து மருந்துக்காக விலையை இன்னும் சிப்லா நிறுவனம் நியவிக்கவில்லை. கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மட்டும் அவசரகால பயன்பாட்டிற்காக சிப்லா மற்றும் ஹெட்டெரோ தயாரித்த மருந்தினை வழங்க இந்திய ஒழுங்குமுறை மருந்து கட்டுப்பாட்டுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,73,105 ஆக உள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,922 பேரை இந்த வைரஸ் புதிதாக பாதித்துள்ளது. இவர்களில், 1,86,514 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 24 மணி நேரத்தில் 418 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிலாந்தாவர்களின் எண்ணிக்கை 14,894 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…