டூல்கிட் விவகாரம் : டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட திஷா ரவி…!
வெளிநாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்ட்டர் தன்பெர்க்குக்கு ஆதரவாக செயல்பட்டதாக திஷா ரவி கைது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 2 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதன் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாக டெல்லி போலீசார் குற்றம்சாட்டிய நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலரான க்ரெட்டா தன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து பதிவிட்டு டூல்கிட் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்ட்டர் தன்பெர்க் கருத்தை பதிவுசெய்தார். அதையே சூழலியல் ஆர்வலர் திஷா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். திஷாவின் இந்த நடவடிக்கைகளால் அவர் மீது தேசத் துரோகம், வன்முறையை தூண்டி விடுவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து டெல்லி போலீசார் பெங்களூரில் வைத்து திஷா ரவியை கைது செய்த நிலையில், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.