#Breaking : நாளை முதல் ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் வாங்கி கொள்ளலாம்.!

Published by
மணிகண்டன்

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்களை அந்தந்த ரயில்வே கவுண்டர்களில் நாளை முதல் வாங்கிக்கொள்ளலாம்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில்,  ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்பட உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். 

இந்த ரயிலுக்கான கால அட்டவணை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. ஜூன் 1 முதல் ஏ.சி. இல்லாத நாள்தோறும் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ரயில்களுக்காக ரயில்வே இணையதளத்தில் முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்கியது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்களை அந்தந்த ரயில்வே கவுண்டர்களில் உரிய சமூக இடைவெளியுடன் நாளை முதல் வாங்கிக்கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இந்த 200 ரயில்களில் தமிழகத்திற்கு எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Published by
மணிகண்டன்

Recent Posts

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

ஜெட்டா :  ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…

13 minutes ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

47 minutes ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

1 hour ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

2 hours ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

2 hours ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

3 hours ago