நாளை காலை கூடுகிறது மகாராஷ்டிரா சட்டப்பேரவை

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது.
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பத்னாவிசு பதவியேற்ற நிலையில் இதற்கு எதிராக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.மேலும் இன்று மாலைக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து தனது முதலமைச்சர் பதவியை தேவேந்திர பத்னாவிசு ராஜினாமா செய்வதாக தெரிவித்து,அதற்கான கடிதத்தை ஆளுநரிடமும் அளித்தார்.பின்னர் ஆளுநர் பகத் சிங் கோஸ்யாரி இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கரை நியமனம் செய்தார்.இந்த நிலையில்இடைக்கால சபாநாயகராக காளிதாஸ் கொலம்ப்கர் பதவியேற்ற நிலையில் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 8 மணிக்கு கூடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எம்எல்எங்களுக்கு நாளை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025