இந்த மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை மூடப்படுகிறது.!

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை ஒருநாள் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது இறப்புக்கு இந்தியா முழுவதும் 7 நாள் (அதாவது இன்று முதல் செப்டம்பர் 6 வரையில்) அரசு அலுவலகங்களில் துக்கம் அநுசரிக்கப்படுகிறது.
மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் நாளை ஒருநாள் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாளை செப்டம்பர் 1ஆம் தேதி ஏற்கனவே அம்மாநிலத்தில் காவலர்கள் தினமாக கொண்டாடப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது நாளை அரசு அலுவலகங்கள் மூடப்பட இருப்பதால், காவலர்கள் தினம் செப்டம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025