கர்நாடகாவில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு.!

Tomato

நாட்டின் பல நகரங்களில் பெட்ரோலை விட தக்காளி விலை அதிகம். தக்காளி விலைமதிப்பற்ற பொருளாக மாறி வரும் நிலையில், கர்நாடகாவில் தக்காளி திருட்டு நடந்துள்ளது.

கர்நாடகாவில், தக்காளி விளைச்சல் பண்ணையிலிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக தக்காளி விலை நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பண்ணை ஒன்றில், ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹளேபிடு தாலுகாவில் உள்ள கோனி சோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சோமசேகர் என்பவரது தோட்டத்தில் திருட்டு நடந்துள்ளது. இவர், மூன்று ஆண்டுகளாக தக்காளி சாகுபடி செய்து வருகிறார்.

இவரது பண்ணைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருடர்கள் புகுந்தனர். 60 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ தக்காளி திருடப்பட்டது. அது ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளி. இந்தியா முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் வேளையில், தக்காளி திருட்டு நடந்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்கப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்