ரூ.300 கோடி வரிஏய்ப்பு செய்து சிக்கி கொண்ட டோலோ 650
பெங்களூரை தலைமையிடமாக கொண்ட மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தில் கடந்த புதன்கிழமை வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதால் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
கொரோனா பெருந்தொற்றின் போது 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் 400 கோடி வருமானம் ஈட்டியது.
அதன்பின் எழுந்த வருமான வரி ஏய்ப்பு புகார் காரணமாக கடந்த 6ம் தேதியன்று ஒன்பது மாநிலங்களில் 36 இடத்தில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரிச்சோதனையில் டோலோ 650 மாத்திரைகள் விற்பனையை அதிகரிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு 1000 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கியதற்கான ஆவணங்கள் சிக்கின.
மேலும் 1.20 கோடி கணக்கில் வராத ரொக்கம், 1.40 கோடி மதிப்புள்ள கணக்கில் வராத தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை நடந்த சோதனையில் 300 கோடி ருபாய் வரிஏய்ப்பு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.