நீரஜ் சோப்ராவின் இன்றைய சாதனை என்றென்றும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பதிவு.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மொத்தம் 6 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 87.03 மீ தூரமும், இரண்டாவது சுற்றில் 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றில் முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
இதனால், ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை இன்று வென்றுள்ளது. கடந்த 2008 ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றிருந்தார். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்துள்ளார்.
ஒலிம்பிக் முதல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அவரது பதிவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு எழுதப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ராவின் இன்றைய சாதனை என்றென்றும் நினைவுகூரப்படும். இளம் நீரஜ் சோப்ரா சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் ஆர்வத்துடன் விளையாடி, இணையற்ற திறமையைக் காட்டினார். தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியா முதல் தங்கம் வென்றதை அனைவரும் கொண்டாடி, நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…