இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் இருக்கும்-பிரதமர் மோடி..!
இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் இருக்கும் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டி வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2012ல் லண்டனில் 1 பதக்கம், 2016ஆம் ஆண்டு ரியோவில் 4 பதக்கம் வென்ற இந்தியா, தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் பதக்க பட்டியலில் இந்தியா 24வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு எப்போதுமே ஒரு சிறப்பு இடம் இருக்கும். இந்த விளையாட்டுகள் ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் மற்றும் அடுத்தடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை விளையாட்டுக்கு ஊக்குவிக்கும். எங்கள் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு சாம்பியன் மற்றும் உத்வேகத்தின் ஆதாரம்.
இந்தியா வென்ற வரலாற்றுப் பதக்கங்களின் எண்ணிக்கை எங்கள் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது. பயிற்சியாளர்கள், ஆதரவு ஊழியர்கள் மற்றும் எங்கள் விளையாட்டு வீரர்களின் குடும்பங்கள் வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை நான் பாராட்ட விரும்புகிறேன். விளையாட்டுகளில் அதிக பங்கேற்பை உறுதி செய்வதற்காக எங்கள் வெற்றிகளை உருவாக்க நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
In the history of Indian sports, the Tokyo #Paralympics will always have a special place. The games will remain etched in the memory of every Indian and will motivate generations of athletes to pursue sports. Every member of our contingent is a champion and source of inspiration.
— Narendra Modi (@narendramodi) September 5, 2021