#Today’sLive : மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பானது..! உச்சநீதிமன்றம்

Default Image
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பானது என்று உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது மக்களுக்கு பாதுகாப்பானது என்றும் இதனால் எந்த முறைகேடும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

Readmore : #BREAKING: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பானது – உச்சநீதிமன்றம்

supremecourtmarriage

2023-02-13 05:52 PM
மெஹ்ராலி கொலை வழக்கு:

மெஹ்ராலி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆப்தாப் அமீன் பூனாவாலா, உயர் படிப்பைத் தொடர கல்விச் சான்றிதழை வழங்கக் கோரியும், குற்றப்பத்திரிகையின் டிஜிட்டல் நகலைக் கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது லீவ்-இன் பார்ட்னர் ஷ்ரத்தா வால்கரை கொன்று, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்ததற்காக குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shraddha murder

2023-02-13 05:39 PM
டெல்லி மேயர் தேர்தல் ஒத்திவைப்பு :

டெல்லியில் பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறவிருந்த மேயர் தேர்தலை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு பிறகு ஒத்திவைப்பதாக டெல்லி எல்ஜி அலுவலகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2023-02-13 04:54 PM
ஒழுங்குமுறை ஆட்சியை வலுப்படுத்துவதற்கு  உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்படும் குழுவிற்கு மத்திய அரசு ஒப்புதல் :

ஹிண்டன்பெர்க்கின் அதானி விவகாரத்தைத் தொடர்ந்து ஒழுங்குமுறை ஆட்சியை வலுப்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்படும் குழுவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அது பணம் மற்றும் முதலீடுகளின் நிலையில் எந்தவித பாதிப்பும் இருக்காது.

2023-02-13 04:44 PM
ஏரோ இந்தியா 2023 :

பெங்களூருவில் நடைபெறும் ஏரோ இந்தியா நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, இலகுரக போர் ஹெலிகாப்டரில் பறந்தார்.

2023-02-13 03:42 PM

பிரபாகரன் குறித்து இலங்கை ராணுவம் பதில் :

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். உரிய நேரத்தில் வெளிவருவர் என பழ.நெடுமாறன் கூறியிருந்தார். இதையடுத்து இலங்கை ராணுவம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவலில் உண்மையில்லை என விளக்கமளித்துள்ளது. ஆனால், பிரபாகரன் உயிரிழந்ததை இலங்கை அரசு இதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore : பிரபாகரன் உயிருடன் உள்ளார் – இலங்கை ராணுவம் மறுப்பு..!

2023-02-13 02:36 PM
மாநில பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு :

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்திற்கு பாஜக மாவட்டக் குழு மாநில பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றது

2023-02-13 02:32 PM
மும்பையில் தீ விபத்து :

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மலாட் பகுதியில் உள்ள குடிசைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

2023-02-13 01:29 PM
சென்னை நகைக்கடை கொள்ளை:

சென்னை பெரம்பூரில் உள்ள நகைக்கடைக் கடையில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Readmore : சென்னை பெரம்பூர் 9 கிலோ தங்க நகை கொள்ளை.! கொள்ளையர்களின் காரை பறிமுதல் செய்த போலீசார்.!

2023-02-13 12:55 PM
இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி :

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான மனுவை ரூ.50,000 அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Readmore : பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.! இபிஎஸ்க்கு எதிரான மனுவை  தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்.! 

2023-02-13 12:12 PM
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் :

தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பழ.நெடுமாறன், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறினார். மேலும் பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்ற தகவலை இப்போது தெரிவிக்க முடியாது என்றும் பிரபாகரன் குடும்பத்தினர் தன்னோடு தொடர்பில் இருகிறார்கள் என்றும் பழ.நெடுமாறன் கூறினார்.

Readmore : #BREAKING : விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார் – பழ.நெடுமாறன்

2023-02-13 11:20 AM
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை :

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல்நாள் நள்ளிரவு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எந்த சோதனைச் சாவடிகளிலும் கொள்ளையர்கள் சிக்காமல் சென்றது எப்படி என்பது குறித்து தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Readmore : “கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டோம்” – டிஜிபி

2023-02-13 10:30 AM

ஏரோ இந்தியா 2023 :

இந்தியாவின் விரிவாக்க திறன்களுக்கு ஏரோ இந்தியா ஒரு எடுத்துக்காட்டு ஆகும். நிகழ்ச்சியில் சுமார் 100 நாடுகள் இருப்பது இந்தியா மீது உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்திருப்பதை காட்டுகிறது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து 700க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த கால சாதனைகளை முறியடித்துள்ளது என்று பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

Readmore : ஏரோ இந்தியா நிகழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு – பிரதமர் மோடி

2023-02-13 10:29 AM

ஏரோ இந்தியா 2023 :

பெங்களூருவில், 14 வது ஏரோ இந்தியா நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவில் 98 நாடுகள், 32 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், 29 நாடுகளின் விமானப்படைத் தளபதிகள் மற்றும் உலகளாவிய மற்றும் இந்திய அசல் உபகரண உற்பத்தியாளர்களின் 73 தலைமைச் செயல் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.

Readmore  : சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி..!

2023-02-13 10:09 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்