இன்றைய ‘விஸ்வகர்மாக்கள்’ நாளைய தொழில்முனைவோராக முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் விஸ்வகர்மா கவுஷல் சம்மன் (PM VIKAS)’ என்ற தலைப்பில் வலைப்பதிவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய விஸ்வகர்மாக்கள் நாளைய தொழில்முனைவோராக முடியும் என்று கூறினார். விஸ்வகர்மா என்பது, கருவிகளைக் கொண்டு பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய பொருட்களை உருவாகும் கைவினைக் கலைஞர்கள்.
2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான பிரதமர் விஸ்வகர்மா கவுசல் சம்மான் (PM VIKAS) என்ற புதிய திட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
இது குறித்து உரையாற்றிய போது பிரதமர் மோடி கூறியதாவது, உள்ளூர் கைவினைப்பொருட்கள் தயாரிப்பில் சிறு கைவினைஞர்கள், முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர்களை மேம்படுத்துவதில் விஸ்வகர்மா யோஜனா கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
பகவான் விஸ்வகர்மா இறுதிப் படைப்பாளராகவும், அவர்தான் மிகச்சிறந்த கலைஞராகவும் கருதப்படுகிறார். பகவான் சிலைகளில், அவர் பல்வேறு கருவிகளை வைத்திருப்பதைக் காணலாம். நம் சமூகத்தில், கருவிகளின் உதவியுடன் தங்கள் கைகளால் கலையை உருவாக்குபவர்களுக்கு, வளமான பாரம்பரியம் உள்ளது, என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
விஸ்வகர்மா நண்பர்களை நாளை பெரிய தொழில்முனைவோராக உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்று மோடி கூறினார். மேலும் பிரதமருடன் இந்த வலைப்பதிவில், மாநில அரசு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மத்திய அரசு அமைச்சகங்களின் செயலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.
பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான தூய மல்லி அரிசியின் மகத்துவம், அதன் ஆரோக்கிய நன்மைக பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…