Today’s Live: எம்.எல்.ஏ சீட்டுக்கு ரூ.1 கோடி..! வெளியாகிய ஆடியோ..!

Default Image
எம்.எல்.ஏ சீட்டுக்கு ரூ.1 கோடி : 

எம்.எல்.ஏ சீட்டுக்கு ரூ.1 கோடி கேட்டதாக கே.பி.முனுசாமி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பழைய ஆடியோவை ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

Readmore : ஒரு கோடி ரூபாய்க்கு அதிமுக சீட் பேரம்? கே.பி.முனுசாமி மீது ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு புகார்!

kpmunusamy16
2023-02-16 05:41 PM
திரிபுரா சட்டமன்ற தேர்தல் :

திரிபுரா சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவில், காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி நிலவரம் வரையில் 69.60% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

Readmore : திரிபுரா சட்டமன்ற தேர்தல்.! இதுவரை 69.60 சதவீதம் வாக்குப்பதிவு நிறைவு.!

2023-02-16 04:46 PM
மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் : 

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பலர் இலங்கைப் படகுகளில் வந்தவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலையீடு செய்யுமாறு இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2023-02-16 04:33 PM
தீப்பெட்டித் தொழிற்சாலை விபத்து :

விருதுநகர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் கழிவுகளை அகற்றும் பணியின்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இறந்தவரின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Readmore : தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீ விபத்து.! ஒருவர் பலி..!

2023-02-16 03:31 PM
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை :

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஒருவர் கைதான நிலையில் கர்நாடகாவில் மேலும் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோலார் பகுதியில் திருப்பத்தூர் எஸ்.பி.தலைமையிலான தனிப்படையினர்  கர்நாடகாவில் 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

2023-02-16 02:14 PM
மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை :

மருத்துவக் கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. தமிழக எல்லையோர மாவட்டங்களில் பிற மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2023-02-16 01:40 PM
நியாயமான முறையில் தேர்தல் நடத்தபடும் :

ஈரோடு கிழக்கு தொகுதியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. அதில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Readmore : நியாயமான முறையில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.! உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி.!

2023-02-16 01:18 PM
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்:

மதுரை மேலூரில் நெல் மூட்டைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மழையில் நெல் மூட்டைகள் நனைந்ததை ஊடகங்களில் பார்த்த  உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Readmore : நெல்மூட்டைங்கள் மழையில் நனைவது வேதனை அளிக்கிறது.. தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.! உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!

2023-02-16 12:51 PM
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை :

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் மையங்களில் ஒரே நாள் இரவில் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஆரிப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் தங்கும் விடுதியில் இருந்த ஆரிப்பை கைது செய்ததோடு ஆரிப்புக்கு அடைக்கலம் கொடுத்த தங்கும் விடுதி உரிமையாளரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

2023-02-16 11:23 AM
2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து :

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பணிமனையில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கவிழ்ந்த ரயில்பெட்டிகளை கிரேன் மூலம் அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக சுல்தான்பூர் ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Readmore : உத்திர பிரதேசத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.!

2 freight trains collided

2023-02-16 11:01 AM

SSC தேர்வு :

SSC தேர்வுகளுக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க 17ம் தேதி கடைசிநாளாகும். நேற்று முதல் SSC தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் இணைதளம் சரியாக இயங்கவில்லை. உடனே சரிசெய்ய SSC தலைவருக்கு கடிதம் எழுதியதாகவும், நேர இழப்பை ஈடுகட்ட கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

2023-02-16 10:09 AM

ஈரோடு கிழக்கு தேர்தல் :

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் விவரங்கள் கசிந்தது தொடர்பாக அறிக்கை அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2023-02-16 09:57 AM

ஈரோடு கிழக்கு தேர்தல் :

ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரிடம் முதன்முறையாக தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகளை பெற 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, வீடு வீடாக சென்று வாக்குகள் பெறப்படுகின்றன.

2023-02-16 09:53 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்