Today’s Live : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சந்திப்பு..!

Default Image

அமித்ஷா-வை சந்தித்த ஆர்.என் ரவி:

இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை குறித்து சற்றுமுன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை சந்தித்து பேசியுள்ளார்.

rn ravi

மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்வு : 

புதுச்சேரியில் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தடைக்கால நிவாரணத்தை ரூ.5,500ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தியும், மீனவர்களுக்கு பேரிடர் கால நிதியுதவியை ரூ.2,500ல் இருந்து ரூ.3,000 ஆகவும் உயர்த்தியும் புதுச்சேரி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மீனவர்களுக்கான நிவாரணம் வழங்கும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

Suspension relief

23.03.2023  4.00 AM

ராகுல் காந்தி குறித்து மல்லிகார்ஜுன் கார்கே பேச்சு:

பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு  ஜாமீனும் வழங்கி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

READ MORE – ராகுல் காந்திக்கு ஜாமீன் கிடைத்தது..! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேச்சு…

இதனால், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் நீதிபதிகள் மாற்றிக்கொண்டே இருந்ததால் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குத் தெரியும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார். நாங்கள் சட்டம் மற்றும் நீதித்துறை மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி போராடுவோம் என்று அவர் மேலும் கூறினார்.

23.03.2023  1.35 PM

ஓ.பி.எஸ். வரவேற்பு – இ.பி.எஸ் எதிர்ப்பு:

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அதிமுக சார்பில் வரவேற்பதாக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். இதனை அடுத்து எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதாவது, அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவராக நான் இருக்கிறேன். ஒரு கட்சிக்கு ஒருவர் என பேசக்கூறியுள்ளீர்கள். ஆனால், பெரும்பான்மை இல்லாதவரை பேச வைப்பது என்ன நியாயம் என்று ஓ.பன்னீர் செல்வத்தை பேச அனுமதித்ததற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

23.03.2023  12.30 PM

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை:

கடந்த, 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், ‘எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது’ என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். தற்போது, பாஜக தாக்கல் செய்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

23.03.2023  11.40 AM

மீண்டும் தாக்கலானது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா:

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதில் பணத்தை இழந்து, இதுவரை 41 பேர் உயிரை மாய்த்துள்ளனர், மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு நிற்கிறேன். இந்த சட்டம் அறிவால் மட்டுமல்ல இதயத்தால் உருவாக்கப்பட்டது என சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனையுடன் பேசியுள்ளார்.

23.03.2023  11.20 AM

எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடிதம் :

உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டிலேயே மேகாலயாவில் அதிக ஊழல் நடப்பதாக  பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். அவர் கண்டிப்பாக ஆதாரம் இல்லாமல் பேசியிருக்க மாட்டார். நீங்கள் அவருக்கு சம்மன் அனுப்பி, அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும்” என்று சிபிஐ இயக்குநருக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

Congress MP Jairam Ramesh Letter

23.03.2023  10.28 AM

காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து :

காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் இந்த தீர்மானத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் (KKSSR) ராமச்சந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

23.03.2023  10.21 AM

சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அலுவல்கள் தொடங்கியது மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. அதில் மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

23.03.2023  10.10 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்