Today’s live : பொறியியல் கல்லூரி செமஸ்டர் முடிவுகளை வெளியிட உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவு..!

Default Image

பொறியியல் கல்லூரி செமஸ்டர் முடிவு:

நிறுத்தி வைக்கப்பட்ட 18 சுயநிதி பொறியியல் கல்லூரி செமஸ்டர் முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலை கழகத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ExamResults

2023-03-14 05:50 PM

ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கு:

ஏர் இந்தியா லண்டன்-மும்பை விமானத்தில் மார்ச் 11 சிறுநீர் கழித்த வழக்கு: ரூ.25,000 ஜாமீன் பத்திரத்தை அளிக்கும் நிபந்தனையுடன் குற்றவாளி ரமாகாந்த்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், ஜாமீன் தொகையை செலுத்த முடியாது என்று அவர் வாதிட்டதையடுத்து, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

2023-03-14 05:15 PM

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் :

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Readmore : ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன்..! மீட்பு பணி தீவிரம்..!

2023-03-14 04:15 PM

தேர்வுத்தாள் கசிந்த விவகாரம் :

அஸ்ஸாமின் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் எச்எஸ்எல்சி தேர்வின் பொது அறிவியல் தாள் கசிவு தொடர்பாக கவுகாத்தி, வடக்கு லக்கிம்பூர், தேமாஜி, சாடியா, திப்ருகார் மற்றும் டின்சுகியா ஆகிய இடங்களில் 22 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2023-03-14 03:30 PM

விவசாயிகள் பேரணி:

ஆயிரக்கணக்கான மகாராஷ்டிர விவசாயிகள் நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி பேரணியாகச் சென்று தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து  அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் பேரணி நடத்துகின்றனர்.

2023-03-14 02:30 PM

பொது ஆட்சேர்ப்பு வாரிய மசோதா :

தெலுங்கானா பல்கலைக்கழக பொது ஆட்சேர்ப்பு வாரிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத தெலுங்கானா ஆளுநருக்கு எதிராக பிஆர்எஸ் கட்சியின் மாணவர் பிரிவு ஹைதராபாத்தில் போராட்டம் நடத்தியது.

2023-03-14 01:45 PM

அரசுக்கு எதிராக போராட்டம் : 

ஒய்எஸ்ஆர்டிபி தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா டெல்லியில் தெலுங்கானாவின் கே.சி.ஆர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். காளேஸ்வரம் லிப்ட் பாசன திட்டத்தில் முறைகேடு நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

2023-03-14 12:30 PM

மக்களவை முடங்கியது :

ஆன்லைன் ரம்மி, அதனை விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக இரண்டாவது நாளாக தொடங்கப்பட்ட மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

rajyasabha meet adjourn

2023-03-14 11:20 AM

அதானி விவகாரம் :

டெல்லியில் அதானி விவகாரத்தில் ஜேபிசி விசாரணை கோரி பிஆர்எஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.

JPC probe in the Adani issue

2023-03-14 11:00 AM

டபோலி ரிசார்ட் விவகாரம்:

மகாராஷ்டிராவில் டபோலி ரிசார்ட் வழக்கில் முன்னாள் எஸ்டிஓ (துணைப்பிரிவு அதிகாரி) ஜெய்ராம் தேஷ்பாண்டே கைது செய்யப்பட்டதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

2023-03-14 10:35 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்