Today’s Live : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி.!
அரசின் தன்னிச்சை அதிகாரம் :
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. ஆணைய அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடக் கோரி ஆர்.ஆர்.கோபால்ஜி தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், ‘பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் தன்னிச்சையான அதிகாரத்துக்கு உட்பட்டது’ என வாதிடப்பட்டது. விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
12.04.2023 5:30 PM
ஏசி விழுந்து முதியவர் பலி :
மருத்துவமனையில் ஏசி விழுந்து படுகாயமடைந்த முதியவர் மரணமடைந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒப்பந்த ஊழியரான திருநாவுக்கரசு (62) ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததால் மருத்துவமனை முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
12.04.2023 5:05 PM
டெல்லி கலால் கொள்கை வழக்கு :
பணமோசடி வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீது இன்று அமலாக்க இயக்குனரகம் தனது வாதங்களை முடித்துள்ளது. மணீஷ் சிஸ்தோடியாவின் வழக்கறிஞர் மறுப்பு வாதங்களை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
12.04.2023 4:20 PM
அனைத்துக்கும் அஸ்வின் தான் காரணம்:
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து, கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்சித் திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி, கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பேசிய உதயநிதி, “அஸ்வின் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேறி இருக்காது. இது அவருடைய பல வருட முயற்சிக்கு கிடைத்த பலன். அஸ்வின் RRக்கு விளையாடி விக்கெட் எடுத்தாலும். நாம் கைத்தட்டுவோம். ஏனென்றால் அவர் தமிழர்” என குறிப்பிட்டார்.
12.04.2023 3:20 PM
ராகுல் காந்தியை சந்தித்த தலைவர்கள் :
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ஜேடி(யு) தலைவர் லாலன் சிங் ஆகியோருடன் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார்.
12.04.2023 1:30 PM
அதிமுக வெளிநடப்பு :
இபிஎஸ் பேசுவதை மட்டும் நேரலையில் கொடுக்க மறுப்பதாக அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். கவனஈர்ப்பு தீர்மானத்தின் போது இபிஎஸ் பேசுவதை புறக்கணித்து விட்டு, அதற்கு பதில் அளிக்கும் முதல்வர். அமைச்சர் பேச்சு மட்டும் நேரலையில் கொடுப்பதாக கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். திட்டமிட்டு ஆளுங்கட்சி இதை அடிக்கடி செய்வதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
12.04.2023 12:30 PM
முதல்வர் எச்சரிக்கை :
விருத்தாசலத்தில் 6 வயது சிறுமியை திமுக கவுன்சிலர் பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து இபிஎஸ் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கே அவமானம்; இச்சம்பவம் தொடர்பாக பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என ஆவேசமாக எச்சரித்தார்.
12.04.2023 11:45 AM
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் :
ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அஜ்மீரில் இருந்து டெல்லிக்கு இன்று இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயில் ராஜஸ்தானில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும். பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
12.04.2023 11:10 AM
IPL2023 :
சென்னை – ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது இதன் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு வரை இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசினர் தோட்ட ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 1 மணிக்கு கடைசி ரயில் புறப்படுவதாகவும், 5-15 நிமிடங்கள் இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
12.04.2023 10:50 AM
துப்பாக்கிச்சூடு :
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் அதிகாலையில் 4.35 மணிக்கு நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து முகாம் உள்ள முழு பகுதியையும் ராணுவம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பஞ்சாபில் உள்ள பதிண்டா ராணுவ முகாமில் நடந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
12.04.2023 10:20 AM