மத்திய அரசின் வழிகாட்டுதல் :
நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பாக சட்டம் இயற்றும் வரை மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அதிகமாக நிலத்தடி நீர் எடுப்பதால் பல இடங்களில் நீரின் தன்மை மாறி உள்ளதாக கூறிய நீதிபதிகள், புதிய சட்டம் இயற்றுவதில் அரசின் நிலைப்பாடு என்ன? என்றும் புதிய சட்டத்தை உருவாக்க அரசுக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? என்பது குறித்தும் அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
07.04.2023 5:55 PM
தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் :
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்த வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், ‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 11ம் தேதி வரை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் நண்பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
07.04.2023 5:20 PM
ரகசியமாக பயணம் செய்யும் புடின் :
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், புடின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதனால், அவர் உயிர் பயத்தில் ரகசிய வாழ்க்கை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது, புடின் ரகசிய ரயிலில் பயணம் செய்து வருவதாக ரஷ்ய பாதுகாப்பு உயர் அதிகாரி க்ளெவ் கரகுலேவ் தெரிவித்துள்ளார். விமானத்தை எளிதாக ட்ராக் செய்ய முடியும் என்பதால், ரயிலில் பயணம் செய்வதாக கூறப்படுகிறது.
07.04.2023 4:30 PM
கொரோனா பரவல் :
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தியது. இதில், ‘அனைத்து மாநிலங்களிலும் சுகாதார வசதிகள், உள்கட்டமைப்புகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தேவையில்லாத அச்சத்தை பரப்பாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்’ எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
07.04.2023 3:50 PM
போக்குவரத்து மாற்றம் :
பிரதமர் மோடி வருகை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனைவரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வழியே திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
07.04.2023 2:43 PM
தூத்துகுடியில் போராட்டம் :
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் பேச்சுக்கு எதிராக, இன்று தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டமானது தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.
07.04.2023 1:47 PM