Today’s Live : நீதிபதிகளுக்கு கொரோனா அறிகுறி..!

Default Image

கொரோனா :

நீதிபதிகளுக்கு கொரோனா அறிகுறி உயர்நீதிமன்றத்தில் 4 முதல் 5 நீதிபதிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில்கொண்டு வழக்கறிஞர்கள் நேரில் வருவதை தவிர்த்து, வீடு அல்லது அலுவலகத்தில் இருந்தே காணொலியில் ஆஜராக வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு கருதி அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

18.04.2023 5:30 PM

இபிஎஸ் விவகாரம் :

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்கக் கோரி இபிஎஸ் தாக்கல் செய்துள்ள மனு மீது தேர்தல் ஆணையம் நாளை பரிசீலனை செய்து, முடிவை அறிவிக்கவுள்ளது. டெல்லி ஐகோர்ட் 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என கடந்த 12ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் விவகாரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.

18.04.2023 4:30 PM

ஜாமீன் மனு :

தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் அமலாக்கத்துறை வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான உத்தரவை ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஏப்ரல் 26 மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

18.04.2023 3:50 PM

குட்கா முறைகேடு வழக்கு :

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதி கடிதம் கிடைக்கவில்லை என சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்.24க்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.

18.04.2023 2:30 PM

ஆப்பிள் ஸ்டோர் :

இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரை மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் திறக்கும் போது, வாடிக்கையாளர் ஒருவர் தனது பழைய மேகிண்டோஷ் கிளாசிக் மெஷினைக் கொண்டு வந்ததைப் பார்த்து ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் ஆச்சரியப்பட்டார்.

18.04.2023 1:30 PM

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் :

வரும் ஏப்ரல் 20ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில். உடனடியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

18.04.2023 1:10 PM

சுதந்திரமான நிபுணர் குழு:

உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் போலீசார் முன்னிலையில் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க சுதந்திரமான நிபுணர் குழுவை அமைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 24ஆம் தேதி விசாரிக்கிறது. இந்தக் குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமை தாங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

18.04.2023 12:26 PM

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் :

இரு கால்களிலும் குறைபாடு இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இணைப்பு பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், இனி ஒரு காலில் குறைபாடு இருப்பவர்களுக்கும் வழங்கப்படும் எனவும்  முதற்கட்டமாக 500 பயனாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

18.04.2023 11:40 AM

ஓரினச்சேர்க்கை திருமண விவகாரம்:

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் கேட்க வேண்டும். இந்த மனுவை பராமரிப்பது குறித்த பூர்வாங்க ஆட்சேபனையை எழுப்பி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

18.04.2023 11:15 AM

ஆளுநருக்கு எதிராக போராட்டம் :

இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் சென்றுள்ள ஆளுநர் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். காரல் மார்க்ஸ், ஸ்டெர்லைட் போராட்டம் உள்ளிட்டவைகள் குறித்த ஆளுநரின் பேச்சுக்கு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

18.04.2023 10:40 AM

மூட்டை மூட்டையாக பணம் :

கர்நாடக தேர்தலுக்காக ஹெலிகாப்டரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மூட்டைகளில் பணத்தை கொண்டு வந்தார் என காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அண்ணாமலை பதிலளித்துள்ளார். அதில், “வினய்குமார் விரக்தியின் உச்சத்தில் இருப்பதால் இவ்வாறு விமர்சிக்கிறார். பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் தான் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறோம்” என குறிப்பிட்டார்.

18.04.2023 10:20 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்