Today’s Live: இ.பி.எஸ். மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்.!

LIVE-NEWS

இ.பி.எஸ். மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்:

எடப்பாடி பழனிசாமி 2021 சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையில் தகவல்.

ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு:

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடை காலத்தை ஒட்டி பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்த நிலையில் இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

26.05.2023 11:30 AM

75 ரூபாய் நாணயம்: 

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறக்க 20க்கும் மேற்பட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், ஆளும் பாஜகவினர் தற்போது இதை கொண்டாடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பை கொண்டாடும் விதமாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

26.05.2023 10:00 AM

ஐ.டி ரெய்டு:

கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஒப்பந்தாரர்களுடைய இல்லங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

26.05.2023 09:00 AM

துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்:

நீலகிரி: குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற, கொள்ளையன் மணி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு. கொள்ளையர்கள் கத்தியால் வெட்டியதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காயம் அடைந்த மணி சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி, மேலும் தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

26.05.2023 08:00 AM

இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற தடை:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி உள்ளிட்ட 80 பேர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது. கடந்த மே 9ம் தேதி இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நடந்த வன்முறை தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரான்கான் உள்ளிட்டோர் வெளிநாடு செல்வதை தடுக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

26.05.2023 07:00 AM

இன்று விசாரணை:

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, திறக்க வேண்டும் என தொடரப்பட்ட பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யப்படுகிறது.

26.05.2023 06:45 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்